மாநாடு 22 April 2022
டாடி மம்மி வீட்டில் இல்ல
தடைபோட யாருமில்ல விளையாடுவோமா உள்ளே வில்லாளா
மைதானம் தேவையில்லை அம்பயரும் தேவையில்லை யாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா
கேளேன்டா மாமூ இது இன்டோரு கேமு
தெரியாம நின்னா அது ரொம்ப சேமு விளையாட்டு ரூலு நீ மீராட்டி ஃபூலு எல்லைகள் தாண்டு அதுதான்டா கோலு.
இப்படியாக பாடல்களைப் போட்டு சிறுபிள்ளைகளை ஆடு செல்ல குட்டி ஆடு என்று நடனம் ஆடவைத்து கைத்தட்டி ரசிப்பது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது இதுவும்கூட இதுபோன்ற நிகழ்வுக்கு காரணமாகவும் இருக்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் மனோஜிப்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் 17 வயது சிறுமி. இவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். சமீபகாலமாக அவரது உடல்நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
அதனால் பெற்றோர்கள் சிறுமியை தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக மகளிர் காவல் நிலையத்திற்கு மருத்துவர்கள் உடனடியாக தகவல் அளித்தனர்.
தகவலின் அடிப்படையில் மருத்துவமனைக்கு விரைந்த காவலர்கள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பக்கத்து வீட்டில் உள்ள 12 வயது சிறுவன் தான் இதற்கு காரணம் என்றும், தன்னுடன் நெருக்கமாக பழகியதால் தான் கர்ப்பமானதாகும் அந்த சிறுமி கூறினார். இதைக்கேட்டு மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட 12 வயது சிறுவனை காவலர்கள் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். பின்பு நீதிபதி முன்பாக ஆஜர்படுத்திய நிலையில், காவல்துறை சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சிறுவனை சீர்திருத்தப்பள்ளிக்கு தற்போது அனுப்பி வைத்துள்ளனர்
