மாநாடு 31 May 2022
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கடந்த 2020ஆம் ஆண்டோடு அது பெற்றிருந்த அனுமதி முடிவடைந்து விட்டதாலும், போதிய ஆசிரியர்கள் இயக்குனர்கள் இல்லாமலும் தொலைதூர மற்றும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது அதன் அனுமதி காலம் முடிவடைந்த நிலையில் தொலைதூர கல்வித் திட்டத்தில் யாரும் பெரியார் பல்கலைக்கழகத்தில் பயில வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது . அதன்படி பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வித் திட்டம் மற்றும் ஆன்லைன் வழியிலான கல்வித் திட்டங்களுக்கு 2020ஆம் ஆண்டு வரை அனுமதி வழங்கப்பட்டது என்றும், ஆனால் அதன்பிறகு பல்கலைக்கழக மானியக் குழுவின் எவ்வித அனுமதியும் பெறாமல் இந்த கல்வித் திட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்திருக்கிறது என்றும், இது முற்றிலும் விதி மீறல்கள் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த கல்வி ஆண்டு அனுமதி கேட்டு விண்ணப்பித்த பல்கலைக்கழக விண்ணப்பம் பரிசீலிக்கப்படாது எனவும், அடுத்த இரண்டு கல்வி ஆண்டுகளுக்கு இந்த கல்வித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.
தொலைதூர கல்வி திட்டம் மற்றும் ஆன்-லைன் வழிக் கல்வித் திட்டங்களில் மாணவர்கள் சேர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது பல்கலைக்கழக மானியக் குழு , இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரும், உயர்கல்வித்துறை செயலாளரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.