மாநாடு 4 May 2022
தருமபுரம் பட்டினப்பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறை தருமபுரம் ஆதின மடத்தில் நூற்றாண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக நடைபெறும் பட்டினபிரவேசம் விழாவை நடத்த இந்த ஆண்டு தமிழக அரசு தடை செய்துள்ளது. இது தவறான நடவடிக்கையாகும். ஆதீனத்தில் வசிக்கும் 72 பேர் விருப்பத்தின்படி தான் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்வதாக கூறுகின்றனர். தோளில் தூக்கிச் செல்வதில் மரியாதை குறைவு ஏதும் கிடையாது. பாரம்பரியமாக நடைபெற்று வரும் தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கும் நிகழ்விற்கான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தருமபுர பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை ஏற்றுக்கொள்ள முடியாது உடனே தடையை நீக்க வேண்டும் என்றார்
