மாநாடு 14 July 2022
நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழுவில் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார், அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், உள்ளிட்டோர் அன்றே அதிரடியாக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்கள்.
அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மீண்டும் அதிரடியாக ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்கள் உட்பட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் இவர்களோடு அதிமுகவினர் யாரும் கட்சி எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதிமுகவில் இருந்து இன்று நீக்கப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்களின் பட்டியல் இதில் ஒருவர் பெயர் மட்டும் விடுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
1. வெங்கட்ராமன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
2.கோபாலகிருஷ்ணன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
3. வெல்ல மண்டி நடராஜன் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்
4. சையது கான் தேனி மாவட்ட செயலாளர்
5. ராமசந்திரன் பெரம்பலூர் மாவட்ட செயலாளர்
6. சுப்பிரமணியன் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர்
7. அசோகன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர்
8. ஓமசக்தி சேகர் புதுச்சேரி மேற்கு மாநில செயலாளர்
9. ஓ.பி.ரவிந்தீரநாத் தேனி பாராளுமன்ற உறுப்பினர்
10. ஜெயபிரதீப்
11. செல்வாராஜ் கோவை செய்தி தொடர்பாளர்
12. மருது அழகுராஜ்
13. அம்மன் வைரமுத்து சென்னை புறகர் மாவட்ட துணை செயலாளர்
14. ரமேஷ் புரட்சி தலைவி பேரவை துணைச் செயலாளர்
15. வினுபாலான் தகவல் தொழில் நுட்ப பிரிவு திருச்சி மண்டல செயலாளர்
16. கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி (வட சென்னை வடக்கு மேற்கு) மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்
17. சைதை எம்.பாபு முன்னாள் மாவட்ட செயலாளர்
18. அஞ்சுலட்சுமி செயற்குழு உறுப்பினர்


உள்ளிட்ட 18 பேரை நீக்கிய தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ,
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் பதவி ஏற்பதற்கு முன்பாக கூட முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தை சந்தித்து

தனது ஆதரவை தெரிவித்து விட்டு சென்றார் இவை அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமி தெரிந்திருந்தும் இவரை மட்டும் நீக்காதது ஏன் என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் அதிமுகவினர்.
