மாநாடு 16 March 2025
சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் நேற்று இரவு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர் . இந்த விழாவில் பேசிய திமுக தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நடிகர் விஜயை குறித்துப் பேசி திட்டி விமர்சிப்பதாக நினைத்து இஸ்லாமியர்களைப் பற்றிய அவமதிப்பான கருத்துக்களை வெளியிட்டு நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களின் மாண்பை கலங்கப்படுத்தும் விதமாக பேசியதாக கூறப்படுகிறது .
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய வீடியோ
https://x.com/Pradeepmsg/status/1900865575745900772
குறிப்பாக நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களைப் பாதிக்கும் வகையில் அவர் பேசியது சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து பலரும் அதிருப்தியடைந்துள்ளனர்
இதனை எதிர்த்து வன்மையாக கண்டித்து பல்வேறு இஸ்லாமிய அமைப்பினரும் பொதுமக்களும் வண்ணாரப்பேட்டை H1 காவல் நிலையத்தில் கூடி காவல்
ஆய்வாளரிடம் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி முறையாக புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . சிறுபான்மையினரின் பாதுகாவலர் நாங்கள் தான் என்று மார்தட்டிக் கொள்ளும் திமுக தரப்பு அறிவுறுக்கத்தக்க ஆபாச பேச்சு பேசும் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.