Spread the love

மாநாடு July 2026

விளையாட்டு வீரர்களுக்கு மனதில் வைராக்கியம் இருந்தாலும், சுற்றியுள்ளவர்கள் , சமூகத்தில் உள்ளவர்கள் ஊக்கத்தை கொடுத்தாலும் உடலில் வலு இல்லை என்றால் வெற்றி பெற முடியாது என்பது எப்படி மறுக்க முடியாத உண்மையோ அதேபோல தான்

சட்ட ஒழுங்கை காக்க வேண்டிய கடமை காவல்துறைக்கு இருக்கிறது என்று சமூகத்தில் உள்ளவர்களும், சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்களும் சொன்னாலும், திறமையான பல காவலர்கள் இந்த காவல்துறையை நேசித்து பணியாற்ற நினைத்தாலும், ஆட்கள் பற்றாக்குறையால் பல இடங்களில் வேலைப்பளு மிகவும் அதிகமாக இருப்பதை காண முடிகிறது, இதனால் சமூக விரோதிகள் குற்றங்களை மிக எளிமையாக செய்துவிட்டு சர்வ சாதாரணமாக அங்கிருந்து தப்புவதையும் அதனையும் தகவல் அறிந்தவுடன் ஆய்வு செய்து விரட்டி பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் பல செயல்களையும் நாள்தோறும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்நிலையில் நாம் உணர வேண்டியது விளையாட்டு வீரர்களுக்கு உடலில் வலிமை எவ்வளவு முக்கியமோ அதேபோல காவல்துறையில் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப காவலர்களையும் காவல் நிலையத்தில் அதிகப்படுத்தி விட்டு அதற்குப் பிறகு அவர்கள் அலட்சியமாக இருந்தால் அந்த இடத்தில் இருக்கும் காவலர்களை அப்புறப்படுத்தி நல்ல காவலர்களை திறமையான காவலர்களை வைக்க வேண்டிய அரும்பெரும் பணியும் நமக்கு இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு முழுவதும் குற்றவாளிகள் சமூக விரோதிகள் பெருகிய அளவு காவல்துறையில் காவலர்களை பெருக்கி பணி அமர்த்தி உள்ளார்களா என்றால் இல்லை என்பதை கசப்பான உண்மை. இந்நிலையில் உதாரணத்திற்கு தஞ்சாவூர் நகரத்தையும், தஞ்சாவூர் தாலுக்கா காவல் நிலையத்தையும் எடுத்துக் கொண்டோம் என்றால் அனைத்து மகளிர் காவல் நிலையம், கிழக்கு காவல் நிலையம், மேற்கு காவல் நிலையம், தெற்கு காவல் நிலையம், மருத்துவக் கல்லூரி காவல் நிலையம் என மொத்தம் ஐந்து காவல் நிலையங்கள் உள்ளது. மற்றும் தஞ்சாவூர் தாலுக்கா காவல் நிலையம் உள்ளது.

ஒரு காவல் நிலையத்தில் எத்தனை பேர் கணக்கில் காட்டினாலும் காவல் நிலையத்தில் ஒரே நேரத்தில் பணியில் இருப்பவர்கள் ஏறக்குறைய 10 காவலர்கள் தான். இவர்களே தான் மக்களை காக்கும் அனைத்து சட்ட ஒழுங்கு பணிகளையும் செய்வார்கள். காவலர் பணி என்பது தினந்தோறும் ஒரே வேலையை செய்வதல்ல ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு வெவ்வேறு விதமான சட்ட ஒழுங்கு பிரச்சனைகளையும் அதற்கு தீர்வு காண வேண்டிய சூழலையும் சரியாக முறையாக (PSO) “தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் சட்டங்களை முழுமையாக கடைப்பிடித்து நிறைவேற்ற வேண்டும். இதுவே இப்படி என்றால்.. இதைவிட மிகக் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா?
தஞ்சாவூர் தாலுக்கா காவல் நிலையம் 1916 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. அப்போது 72 கிராமங்கள் தாலுக்கா காவல் நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டது, இதன் எல்லை என்பது ஏறக்குறைய 50 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டதாக இருக்கிறது. இந்த காவல் நிலையத்தில் 26 முதல் 29 காவலர்கள் இருப்பதாக தெரிகிறது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் காவல் நிலைய பணியில் இருப்பதில்லை இருக்கவும் முடியாது, அப்படி என்றால் ஒரே நேரத்தில் அதிகப்படியாக ஏழு பேர் காவல் பணியில் இருப்பதே அரிதான காரியம். இந்த சூழலில் ஒரு காவலர் காவல் பணிக்காக வடக்கு திசையில் 10 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தாலும் அதே நேரத்தில் இன்னொரு இடத்தில் தெற்கு திசை தாலுக்கா காவல் எல்லை முடிவில் ஒரு குற்ற செயல் நடந்தாலும் அதனையும் பல நேரங்களில் இது காவலரை சென்று பார்க்க வேண்டிய சூழல் உள்ளது என்பதே கசப்பான உண்மை.
1916 ஆம் ஆண்டு 72 கிராமங்களிலும் இருந்த மக்கள் தொகை கணக்கும் இப்போதுள்ள மக்கள்தொகை எண்ணிக்கையும் எத்தனை மடங்கு பெருகி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு உண்மையிலேயே சட்ட ஒழுங்கை காக்க கடமை செய்ய வேண்டும் காவலர்கள் என்று நினைத்தால் இந்த காவல் நிலையத்தில் குறிப்பாக காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். பலமுறை இந்த காவல் நிலையத்தில் உள்ள காவல் ஆய்வாளர்களே இதனை கோரிக்கை வைத்ததாகவும் தெரிகிறது, ஆனாலும் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்த காவல் நிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ஒரு ஊரில் ஒரு அடையாளத்தை சொல்லி விசாரித்தால் இவர் யார் என்பது அந்த சுற்று வட்டாரத்தில் மொத்த ஜாதகத்தையும் சொல்லிவிடுவார்கள் ஆனால் இன்று நிலை அப்படியல்ல “மகாராஷ்டிரா மாநிலத்தவர் மாரியம்மன் கோவிலில் வேலை பார்க்கிறார் என்கிற நிலை உருவாகியுள்ளது குற்றங்களும் பல்கி பெருகி பல விதங்களிலும் பொதுமக்களை அச்சுறுத்துகிறது. இந்த காலச் சூழலுக்கு ஏற்ப மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கேற்ப காவலர்களையும் குறிப்பாக தஞ்சாவூர் தாலுக்கா காவல் நிலையத்தில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கட்டாயம் மக்களை காக்கும் கடமையை திறம்பட செய்ய திருவாளர்கள் தாலுக்கா காவல் நிலையத்தில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவார்களா ?

93030cookie-checkதஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் ஏன்?

Leave a Reply

error: Content is protected !!