மாநாடு 24 July 2026
ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவுகளை பறிக்கின்ற நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி இடதுசாரிகள் பொது மேடை சார்பில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகில் இன்று 24/7/26 காலை. 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத் திற்கு உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம் சி.முருகேசன் தலைமை வகித்தார். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப் பாளர் துரை. மதிவாணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத் தினை மக்கள் அதிகாரத்தின் மூத்த தலைவர் காளியப்பன் தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தங்க.குமரவேல் ஆர்ப்பாட்டத் தினை நிறைவு செய்து உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஏழை எளிய கிராமப்புற அரசு பள்ளி மாணவ மாணவியர் களின் மருத்துவ கனவுகளை பறிக்கின்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும், தனியார் கார்ப்பரேட் கல்வி நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிப்பதற்கு வழி வகுக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நீட் தேர்வு எழுதுவதற்கு முன்னாடியும், தேர்வுக்கு பிறகும் பயத்தில் பல்வேறு மாணவ மாணவியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகளுக்கு காரணமான ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை கைவிட வேண்டும், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவ, மாணவிகள் குடும்பத்திற் கான நிதி உதவி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது. நீட் தேர்வு ரத்து என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லியில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஒன்றிய அரசு பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையிலும், பல்வேறு அமைப்பின் தலைவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவும் தற்காலிகமாக உண்ணாவிரத போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளார்.

இவரது போராட்டத்திற்கு தமிழ்நாட்டின் மக்கள் சார்பாகவும், இடதுசாரிகள் பொது மேடை சார்பாகவும் வாழ்த்துக் களையும், பாராட்டு களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று வலியுறுத்தப் பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா, , சிபிஐ எம் எல் லிபரேஷன் கட்சி மாநகர செயலாளர் எஸ்.எம். இராஜேந்திரன், சிபி எம்எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் வே.உமாபதி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ப.ஜெகதீசன், எழுத்தாளர் சாம்பான், பேராசிரியர் ஜான் வின்சென்ட்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ் முதல்வன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் அ.யோகராஜ், எச் எம் எஸ் மாவட்ட செயலாளர் சின்னப்பன், யுடியூசி மாவட்ட தலைவர் மோகன்தாஸ், ஆதித்தமிழர் பேரவை மூத்த தலைவர் நாத்திகன், வல்லம் சமூக ஆர்வலர் அற்புத ராஜ்,புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் ஆர்.லட்சுமணன் தலைவர் த.தாமஸ், ஒருங்கிணைப் பாளர் தனபால், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
