மாநாடு 8 August 2026
தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொழிற் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மணிமண்டபம் அருகில் உள்ள மின்வாரிய தொமுச அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கு.சேவியர், எஸ் கே எம். மாவட்ட ஒருங்கிணைப் பாளர் என்.வி. கண்ணன் தலைமை ஆகியோர் வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய அரசு ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற, நாளுக்கு நாள் விஷம் போல் ஏறி வரும் விலைவாசி வியர்வை குறைக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்தும், தொழிலாளர் களுக்கு எதிராக நான்கு சட்டங்களை அமல்படுத்தியது திரும்பப் பெறவும், கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை ரத்து செய்யவும், என்எல்சி, எல்ஐசி உள்ளிட்ட பொதுத் துறை பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவுகளை கைவிடவும், விவசாயிகள் போராட்டத்தின் போது உறுதி அளித்தவாறு விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயத்தை சட்டமாக கொண்டு வருவது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளில் மத்திய தொழிற் சங்கங்கள் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து நாடு தழுவிய மறியல் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.

இந்த அழைப்பையேற்று தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவிடை மருதூர் ஆகிய நான்கு மையங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என்று ஒரு மனதாக முடிவு செய்யப் பட்டது. இந்த போராட்டத்தில் அனைத்து விவசாயிகள் தொழிலாளர்கள் ஏழை எளிய உழைக்கும் மக்கள் பங்கேற்க அறைகூவல் விடுக்கப்பட்டது. கூட்டத்தில் தொமுச நிர்வாகிகள் பாஸ்டின், சந்தானம், ஏஐடியுசி நிர்வாகிகள் சி.சந்திரகுமார், ஆர்.தில்லை வனம், வெ.சேவையா, ஆர் பி. முத்துக்குமார், சிஐடியு நிர்வாகிகள் சி.ஜெயபால், எம்.கண்ணன், கே.அன்பு, ஏஐசிசிடியூ நிர்வாகி கே.ராஜன், எச் எம் எஸ் சங்க நிர்வாகிகள் சின்னப்பன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
