Spread the love

மாநாடு 8 August 2026

ஏ ஐ டி சி உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட 26 வது பேரவை கூட்டம் தஞ்சாவூர் சங்க அலுவலகத்தில் இஅ தலைவர் வெ.சேவையா தலைமையில் நடைபெற்றது.

பேரவைக் கொடியினை சுமைதூக்கும் சங்கத்தின் மாநில தலைவர் அ.சாமிக் கண்ணு ஏற்றி வைத்து சிறப்பித்தார். சங்கத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் கே.கல்யாணி வரவேற்புரை நிகழ்த்தினார். ஜி.கார்த்தி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். ஏ ஐ டி யு சி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் பேரவையை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

வேலை அறிக்கையை சங்கத்தின் மாவட்ட செயலாளர் தி.கோவிந்த ராஜன் முன்வைத்தார்.மாவட்ட பொருளாளர் பி.சுதா வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். பேரவையினை வாழ்த்தி போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் துரை. மதிவாணன், உள்ளாட்சி சங்க மாவட்ட செயலாளர் தி.திருநாவுக் கரசு, கட்டுமான சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.செல்வராஜ், டிசிஎம்எப் சங்க தலைவர் எஸ்.வீரன், காமராஜ் மார்கெட் சங்க செயலாளர் எஸ்.பரமகுரு, உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கி னார்கள். உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆர். தில்லைவனம் நிறைவு செய்து உரையாற்றினார்.

மாவட்ட துணைத் தலைவர் கே.மணி கண்டன் நன்றி கூறினார். பேரவையில் நல வாரியத்தில் பதிவு செய்து ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் ரூபாய் 6000 ஆக ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், பிரதி மாதம் 5-ம் தேதிக்குள் ஓய்வூதியம் வழங்க வேண்டும், 60 வயது பூர்த்தி அடைந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மரணம், விபத்து மரணம் உள்ளிட்டவை களுக்கு வழங்கும் தொகை கட்டுமான தொழிலாளர்களுக்கு இணையாக வழங்கப்பட வேண்டும், வாரியத்தில் பதிவு செய்து அனைவருக்கும் வீட்டுமனை பட்டா, நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும், தேசியமய மாக்கப்பட்ட வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி நிறைவேற்றப் பட்டது.மக்கள் விரோத, தொழிலாளர் விரோத ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து வருகிற பத்தாம் தேதி நடைபெறும் நாடு தழுவிய மறியல் போராட்டத்தில் பங்கேற்பது வெற்றி பெறச் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

94740cookie-checkஉடலுழைப்பு வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ6000

Leave a Reply

error: Content is protected !!