மாநாடு 10 August 2026
அனைத்து தொழிற் சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் இன்று நாடு தழுவிய சிறை நிரப்பும் மறியல் போராட்டம் நடைபெற்றது அதன்படி தஞ்சையில் தலைமை அஞ்சலகம் முன்பு மறியல் போராட்டம் இன்று காலை நடைபெற்றது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர் விபரம் பின்வருமாறு :

தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு தொமுச மாவட்ட செயலாளர் சேவியர், ஏ ஐ டி யு சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார், சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் மாலதி சிடிபாபு, ஐ என் டி யு சி மாவட்டச் செயலாளர் ரவி, ஏ ஐ சி சி டி யு மாவட்ட மாவட்ட தலைவர் ராஜன், எச் எம் எஸ் மாவட்ட செயலாளர் சின்னப்பன், யூடியூசி மாவட்ட தலைவர் மோகன்தாஸ், ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகிகள் கண்ணன், சாமி.நடராஜன், ஆர். இராமச்சந்திரன்ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த மறியல் போராட்டத்தில் நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். தொழிற்சங்க உரிமைகளுக்கு முழுமையான உத்தரவாதம் வழங்க வேண்டும்.

தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அகில இந்திய அளவில் அனைவருக்கும் மாதா ஊதியம் ரூபாய் 42,000 ம் சட்டபூர்வ குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். விவசாயி மற்றும் தொழிலாளர் விரோத வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தங்களை கைவிட வேண்டும். தனியார் மயமாக்கும் மற்றும் தேசிய சொத்து பணமாக்கல் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை வலுப்படுத்த வேண்டும். வி பி ஜி ராம்ஜி திட்டத்தை கைவிட வேண்டும். கட்டுமானம் முறைசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பொது கல்வி மற்றும் பொது சுகாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். பொது விநியோகத் திட்டத்தை பாதுகாக்க வேண்டும். அடக்குமுறை சட்டங்களை திரும்ப பெற வேண்டும்.

அரசியலமைப்பையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. நாடு தழுவியை நடைபெறும் இந்த போராட்டம் ஆனது தஞ்சை மாவட்டத்தில் நான்கு இடங்களில் நடைபெற்றது. தஞ்சையில் ரயில் நிலையத்திலும், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவிடை மருதூரில் தபால் நிலையம் முன்பும் நடைபெற்றது. இந்த ரயில் மறியல் போராட்டத்தில் பெண்கள் உள்ளிட்டு ஏராளமானோர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
