Spread the love

மாநாடு 31 October 2026

நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்களின் வழக்கை அதிரடியாக ரத்து செய்துள்ள முதல்வர் ஜோசப் விஜய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களும் பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல இடங்களில் வழக்கு பதிவு செய்தனர்.

அப்படி மொத்தம் தமிழகம் முழுவதும் 65 தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒரு வழக்கில் 20 பேர், 30 பேர் என்று சேர்த்து பார்க்கும் போது மொத்தமாக 1800-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் அந்த 65 வழக்குகளில் சிக்கியிருந்தனர். அதாவது 65 FIR-களுக்குள் 1800 பேரின் பெயர்கள் இருந்தன. இந்த வழக்குகள் தான் இத்தனை நாளாக நிலுவையில் இருந்து வந்தது.

இந்த விவகாரம் முதல்வர் ஜோசப் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதை கேட்டறிந்த முதல்வர், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக் கூடாது என்பதற்காக 1800 பேர் மீதான அந்த 65 வழக்குகளையும் ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார். இதற்கான சட்ட நடவடிக்கைகளை உடனே தொடங்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.

முதல்வரின் இந்த அதிரடி உத்தரவை மாணவர்கள், பெற்றோர்கள் , சமூக ஆர்வலர்கள் என அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

95480cookie-checkநீட் தேர்வு போராட்டம்,1800 பேர் மீதான வழக்கு ரத்து முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

Leave a Reply

error: Content is protected !!