மாநாடு 15 October 2022
தமிழக அரசு தன்னிச்சையாக போனஸ் அறிவித்ததை கண்டித்து ஏஐடியுசி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன் அறிக்கை விட்டிருக்கிறார். அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்டு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10% போனஸ் தன்னிச்சையாக அரசு அறிவித்துள்ளது கண்டனத்துக்குரியது.
ஏ ஐ டி யு சி சம்மேளனம் சார்பில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு 25% போனஸ் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசு அனைத்து தொழிற்சங்கங் களையும் அழைத்து பேசாமல் தன்னிச்சையாக போனஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் போனஸ் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டது, குறைக்கப்பட்டதை கண்டித்து தொமுச தலைமையில் அனைத்து சங்கமும் சேர்ந்து போராட்டம் நடத்தினோம் அப்போது கொரோனா காலகட்டம் என்ற காரணத்தை கூறினார்கள்.
ஆனால் தற்போது நடைபெறும் ஆட்சியில் கடந்த ஆட்சியைப் போலவே அறிவிப்பு வெளியிடப்படுகிறது. கடந்த காலத்தில் 20% என்பது 16,800 ரூபாய் வழங்கியுள்ள நிலையில்,கடந்த கொரோனா காலத்தில் 10% அறிவிக்கப்பட்டு 8,400 தான் 2 வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு போனஸ் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் இரவு, பகல் பாராது, நேரம் ,காலம் பார்க்காது, அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை அரசு ஏமாற்றியுள்ளது.
தற்போது நடைபெற்று முடிந்துள்ள 14 வது ஊதிய ஒப்பந்தத்தில் அடிப்படைச் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் 10% போனஸ் என்றாலே ஒரு மாத சம்பளம் வழங்கப்பட வேண்டும் ,ஆனால் இதற்கும் சீலிங் வைத்து 8,400 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அனைத்து தொழிற்சங்கங்களை அழைத்து பேசி 25% போனஸ் அறிவிக்கப் பட வேண்டும்.
அதேபோல அரசின் நலத்திட்டங்களையும், அரசிற்கு வருவாய் ஈட்டி வருகின்ற நுகர் பொருள் வாணிப கழகம், டாஸ்மாக், ஆவின் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் போனஸ் உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்று ஏஐடியூசி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் துரை. மதிவாணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.