மாநாடு 30 April 2022
தமிழ்நாட்டில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. ஆனால், மாநில அரசு மின்தடை இல்லை என்றும் தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு நிலக்கரி கிடைக்காததால் தான் மின்விநியோகம் தடை ஏற்படுவதாக தமிழகஅரசு கூறி வருகிறது. தற்போது போதுமான அளவுக்கு மத்தியஅரசு நிலக்கரி ஒதுக்கி உள்ளதால், இனிமேல் மின்தடை ஏற்படாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மின்தடை பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் பல தகவல்கள் உண்மைக்கு மாறாக இருக்கிறது இதுபோன்ற பொய்யான கருத்துகளை மக்களிடம் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
கடந்தவாரம் சனிக்கிழமைக்கு பிறகு மின் விநியோகத்தில் தடையில்லை. இனி எப்போதும் மின் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் இருக்காது. தற்போது தேவையை விட கூடுதலாக 500 மெகாவாட் மின்சாரம் உள்ளது. ஆனால் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர் என்றார்.
மின் தடையால் பஞ்சாப்பில் போராட்டம் நடந்து வருகிறது. ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகாவில் மின்வெட்டு உள்ளது. தமிழகம் மட்டுமல்ல. நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு உள்ளது. தமிழகத்தில் 119 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. அதனால், சமூக வலைதளங்களில் மின்தடை குறித்து உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை பதிவிட்டு மக்களிடம் பரப்பினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். மக்களிடம் பதற்றமான சூழலை உருவாக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
மின்தடை என்பது யாரும் போயி வீடு தேடி சொல்லவேண்டிய செயல் அல்ல, அதை ஒவ்வொரு பொதுமக்களும் தங்கள் இருக்கும் இடத்தில் இருக்கும் வீடுகளிலிருந்தே உணரக்கூடிய காரியம் மின்தடை என்று யாரும் பொய்யாக அவதூறு கூறவும் முடியாது அப்படி யாராவது பொய்யாக அவதூறு கூறினால் கூட அவர்களை தான் மக்கள் புறக்கணிப்பார்கள். நிலை இவ்வாறு இருக்க கருத்து சுதந்திரத்தை பற்றி சுதந்திரமாக பேசக்கூடிய திமுகவின் அமைச்சர் இவ்வாறு ஊடகங்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.
