Spread the love

மாநாடு 30 April 2022

இன்று பெட்ரோல் ,டீசல் ,எரிவாயு, கட்டுமான பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.

அதன்படி ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் இன்று காலை 10 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் தொடர்வண்டி நிலையத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பட்டுக்கோட்டை, பேராவூரணி ,திருவையாறு, கும்பகோணம்,பாபநாசம்,ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களும், மகளிர் பாசறை பொறுப்பாளர்களும், இளைஞர் பாசறை ,வீரத்தமிழர் முன்னணி உட்பட அனைத்து பாசறை பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் திரளாக கலந்துகொண்டு தங்களது கண்டனக் குரல்களை முழக்கங்கள் மூலமாகவும், கண்டன உரைகள் மூலமாகவும்  மக்களுக்கும் மத்திய மாநில அரசுகள் கேட்கும் வண்ணம் எடுத்து வைத்தார்கள்.

10 மணி அளவில் தொடங்கப்பட்ட ஆர்ப்பாட்டம் 12.30 மணி அளவில் நிறைவு பெற்றது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களது கண்டனக் குரல்களை அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் ஆதரிக்கும் வண்ணம் அவ்வப்போது கரவொலி எழுப்பியது நாம் தமிழர் கட்சியினரை மேலும் ஊக்கப்படுத்தியது.

இந்த போராட்டத்திற்கு மகளிர்கள் தங்கள் குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக பங்கேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

32870cookie-checkதஞ்சையில் ஏன் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Leave a Reply

error: Content is protected !!