மாநாடு 2 April 2022
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள கிராமம் கோபுராஐபுரம் அந்த பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (26) 4மணியலவில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது பாபநாசம் அரசு மருத்துவமனையில் முதல் உதவிக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு எந்த வித சிகிச்சையும் அளிக்காமல் காலம் தாழ்த்தி மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனை கண்ட உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக நாங்கள் தஞ்சாவூர் அழைத்துச் செல்கிறோம் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கூறியிருக்கிறார்கள். அப்போது ஆம்புலன்ஸ் வாகனமும் மருத்துவமனையில் நின்று இருந்ததாக கூறுகிறார்கள் ,

இருந்த போதும் அதனை தராமல் காலம் தாழ்த்தியதால் பொறுமை இழந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் செய்திருக்கிறார்கள். அதன் பிறகு பேச்சுவார்த்தை நடத்தி ஆம்புலன்ஸ் வாகனத்தை தந்ததாக கூறுகிறார்கள்

இதைப்பற்றி அவரின் உறவினர் கூறும்போது 4மணிக்கு ஏற்பட்ட விபத்துக்கு இவர்களும் சிகிச்சை தரவில்லை அவசர உதவியையும் உடனடியாக தராமல் காலம் தாழ்த்தினார்கள் அவருக்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அதற்கு பாபநாசம் அரசு மருத்துவமனையில் இந்த நேரத்தில் இருந்தவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.
