மாநாடு 2 May 2022
ஒரு ட்வீட் போட்டு மாநில கட்சிகள் முதல் இந்திய ஒன்றிய கட்சிகள் என அனைத்துக் கட்சி தலைவர்களையும் திரும்பிப் பார்த்து சிந்திக்க வைத்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிகே எனப்படும் பிரசாந்த் கிஷோர் நிதிஷ்குமார் கட்சியில் இருந்து பிரிந்து மற்ற கட்சிகளின் வெற்றிக்காக தனது நிறுவனத்தின் மூலம் பணியாற்றி வந்தார்.
ஏற்கனவே பாஜக, காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்பட பல கட்சிகளின் வெற்றிக்காக பணியாற்றி உள்ளார். வருகிற ஆண்டு நடைபெற உள்ள தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் டிஆர்எஸ் கட்சிக்காக பணியாற்றப்போவதாக ஒப்பந்தம் போட்டுள்ளார்.
இந்நிலையில் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுகாகு முன்பாக காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைப்பார் என்ற தகவல் வெளியாகியிருந்தது.
அதனைத் தொடர்ந்து சோனியா காந்தி உட்பட மூத்த தலைவர்களை நான்கு முறை சந்தித்து பேசி பல்வேறு கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாகவும் காங்கிரஸ் கட்சிக்காக 2024 ஆம் ஆண்டு பிகே பணியாற்றி நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக பணியாற்றுவார் என்று கருதப்பட்டது .

நான் எனது பக்கத்தைத் திருப்புகிறேன். உண்மையான மாஸ்டர்களிடம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார் இதில் அவர் மாஸ்டர்கள் என்று மக்களை குறிப்பிடுகிறார்.
அடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து அவர்களை ஒன்றிணைத்து கட்சி ஆரம்பிப்பார் என்றும் தானே 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளார் என்றும் கருதப்படுகிறது.
இதன் காரணமாக பல ஆண்டுகளாக தங்கள் கட்சியின் தலைவர்களுக்காக கட்சியின் வெற்றிக்காக உழைத்த தொண்டர்களை பெரிதும் நம்பாமல் பணம் கொடுத்து கூலி வேலைக்கு ஆட்களை நிறுத்தி வியூகும் அமைத்த கட்சிகளுக்கு புளியைக் கரைத்து உள்ளார் பிரசாந்த் கிஷோர்.
