Spread the love

மாநாடு 13 December 2022

இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை அருகே இலுப்பைகோரை ஊராட்சியில் , பாபநாசம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரின் மேம்பாட்டு நிதியில் 11 லட்சம் செலவில் பொதுப் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு கட்டிடத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உடன் இருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் , திமுக (தெற்கு) ஒன்றிய செயலாளர் நாசர் ஒன்றிய துணை செயலாளர் கலியமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் உட்பட மாவட்ட ஒன்றிய, நகர இலுப்பைகோரை கிளைகழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தி – இராஜராஜன்.

58660cookie-checkதஞ்சாவூரில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்

Leave a Reply

error: Content is protected !!