மாநாடு 25 July 2026
ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை பறிக்கின்ற நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் கீழ ராஜ வீதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வளாகத்தில் இன்று 25/7/26 காலை 10 மணிக்கு அனைத்திந்திய மாணவர்-இளைஞர் பெருமன்றங்கள் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில பொருளாளர் க.காரல் மார்க்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மருத்துவர் ச.சுதந்திரபாரதி முன்னிலை வகித்தார். காத்திருப்பு போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் கோ.சக்திவேல் தொடங்கி வைத்து பேசினார்.

போராட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் வினாத்தாள் கசிவு, முறைகேடு களுக்கு காரணமான ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது. போராட்டத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் செல்வராஜ், அய்யனார், புவனேஷ்,தேவா, சந்தோஷ், நவீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
