Spread the love

மாநாடு 30 April 2022

 

சில ஆண்டுகளுக்கு முன்பு லாட்டரி சீட்டால் தமிழகத்தில் பல குடும்பங்கள் அழிந்தது என்பது அனைவரும் அறிந்ததே தமிழ்நாடு அரசு அதை தடை செய்தவுடன் பல குடும்பங்கள் மதுக்கடைகளால் அழிநதாலும் கூட லாட்டரி சீட்டு மோகத்திலிருந்து தப்பித்து இருக்கிறது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். சமீபகாலமாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு மோகத்தால் பல குடும்பங்கள் நடுத்தருவிற்கு வருகின்றது என்பதை செய்திகளின் வாயிலாக அறியமுடிகிறது இதற்கு கிரிக்கெட் வீரர்கள் முதல் நடிகர்கள் வரை விளம்பரத்தில் தோன்றி கவரும் விதமாக நடிக்கின்றனர் அதன் விளைவாக சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த பிரபு கடந்த சில ஆண்டுகளாக ஐடி ஊழியராக இருந்திருக்கிறார். திடீரென வேலை இழந்துள்ளார். அதன்பிறகு டாஸ்மாக் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். கிரெடிட் கார்டில் கடன் வாங்கி ஆன்லைனில் ரம்மி விளையாடியதாக தெரிகிறது. அதில் சுமார் ரூ.35 லட்சத்தை இழந்துள்ளார். இதைத்தொடர்ந்து கடனை திருப்பி செலுத்துமாறு வங்கி தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் மனமுடைந்த பிரபு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இவ்வாறான தற்கொலை என்பது தொடர்கதையாகி வருகின்ற வேளையில் உரிய நடவடிக்கை எடுத்து இவ்வாறான சூதாட்டங்களையே தடை செய்ய வேண்டும்.

 

33010cookie-checkஆன்லைன் விளையாட்டில் 35 லட்சம்

Leave a Reply

error: Content is protected !!