மாநாடு 2 July 2022
முறையற்ற நிர்வாகத்தின் தரமற்ற சாலையால் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் சாலைகளே இல்லை . சாலைகள் இருந்த இடங்களில் எல்லாம் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது இதனால் சாலை விபத்துகள் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்கின்ற இடங்களில் எல்லாம் புதிது புதிதாக திட்டங்களை அறிவித்து தொடங்கி வைக்கிறார் அது ஊடகங்கள் வாயிலாக விளம்பரப் படுத்தப்படுகிறது. முதல்வர் வருகிறார் என்பதற்காக சில இடங்களில் அந்த நேரத்திற்காக மட்டும் பயன்படுகிற அளவிற்கு தரமற்ற சாலைகள் போடப்படுகிறது. அதன்படி இன்று புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் பல்வேறு நிகழ்வுக்காகவும் நேற்று கரூர் சென்று இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி அவசர கதியில் கரூரில் இருந்து தாந்தோணி மலை செல்லும் முக்கிய சாலையான மாவட்ட ஆட்சியர் அலுவலக தார் சாலை போடப்பட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்றிருக்கிறது.
அந்தப் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வரும் பிரதான சாலையில் போடப்பட்டிருந்த தார் சாலையில் நேற்று தனியார் தொழிற்சாலைக்கு வேலை ஆட்களை ஏற்றி செல்லும் பேருந்தின் ஒரு பக்க சக்கரங்கள் தார் சாலையில் சிக்கி இருக்கிறது. இதனால் பேருந்து ஒரு பக்கமாக சாய்ந்து இருக்கிறது பயத்தில் தொழிலாளர்கள் அலறி இருக்கிறார்கள் இச்செய்தி கேள்விப்பட்டு விரைந்து வந்த காவல் துறையினர் பேருந்தில் இருந்தவர்களையும் ,பேருந்தையும் மீட்டு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
முதல்வர் வருகிறாரே, தரமற்ற பணிகள் நடைபெறுவது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுப்பாரே என்று கொஞ்சமாவது அச்சம் இருந்தால் இதுபோல தவறுகள் நடைபெறாது இதுபோன்ற தரமற்ற சாலைகளை முறையற்றவர்கள் போடுவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருக்கிறது இதற்கு யார் பொறுப்பேற்பது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
