மாநாடு 16 February 2022
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல் பட்டி பள்ளி +1 படித்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய லாவண்யா தற்கொலை விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில்,
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்த +1 மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர், வடசேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வந்தார். சம்பவத்தன்று இவர் பள்ளியில் இருந்து இடையிலேயே வீட்டுக்கு வந்ததாகவும், வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாப்பாநாடு போலீசார் உயிரிழந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் பள்ளி ஆசிரியர்கள் மாணவியின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த பள்ளியில் பணியாற்றி வரும், ஆங்கில ஆசிரியர் கணேசன், மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்து வீட்டுக்கு சென்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆங்கில ஆசிரியர் கணேசனை (31) பாப்பநாடு போலீசார் கைது செய்திருக்கிறார்கள் . இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச்சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.