Spread the love

மாநாடு 03 August 2026

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர கிளை முன்பு இன்று  மதியம் 12 மணிக்கு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி மத்திய சங்கத் தலைவர் என் .சேகர் தலைமை வகித்தார். சி ஐ டி யு நிர்வாகி எஸ்.ராமசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வேலூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சோளிங்கர் பணிமனை தொழில்நுட்ப பணியாளர் பாஸ்கரன் அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணத்தை கடிதமாக எழுதி வைத்துள்ளார். இதில் டீசல் சேமிப்பு குறித்து அதிகாரிகள் தவறான நடவடிக்கைகளேஎனக்கு மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டேன் என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.

எனவே இவரது தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், டீசல் சேமிப்பு என்ற பெயரில் அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் அதிகாரிகள் தங்களது டீசல் செயல்பாடுகளை உயர்த்தி காண்பிப்பதற்கு பொய்க்கணக்கு காட்டி தாங்கள் நல்ல பெயர் பெறுவதற்கு ஓட்டுனர், தொழில்நுட்ப பணியாளர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வரும் நடவடிக்கை களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

டீசல் சேமிப்பு குறித்து உண்மையான நிலவரத்தை தெரியப்படுத்த வேண்டும். தற்கொலை செய்து கொண்ட பாஸ்கரன் இறப்புக்கு 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தமிழ்நாடு அரசுக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் வலியுறுத்தப் பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாநிலத் துணைத் தலைவர் துரை. மதிவாணன், கும்பகோணம் சங்க பொதுச் செயலாளர் தாமரைச் செல்வன், பொருளாளர் சி.ராஜ மன்னன், ஐஎன்டியூசி பொருளாளர் தி.மணிகண்டன், நிர்வாகி தமிழரசன், டிஎம்எம்கே சங்க பேரவை தலைவர் அறிவழகன், தவெக சங்க நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி, செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

94470cookie-checkதஞ்சையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Leave a Reply

error: Content is protected !!