Spread the love

மாநாடு 01 August 2026

கர்நாடக அரசு மேகதாவில் அணைகட்ட முயற்சிக்கும் நடவடிக்கை களுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகில் இன்று காலை 11 மணிக்கு மாவட்ட செயலாளர் கோ.சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.

கோரிக்கை களை விளக்கி திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினரு மான க. மாரிமுத்து, மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.இராமச் சந்திரன், மாவட்ட பொருளாளர் கோ.பாஸ்கர் ஆகியோர் பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டின் குடிதண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்யும், காவிரி டெல்டாவின் பாசனத்திற்கு உறுதுணையாக விளங்கும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட முயற்சிக்கும் நடவடிக்கைகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க கூடாது, நாடாளு மன்றத்தில் ஒன்றிய நீர் வளத்துறை அமைச்சர் காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கின்ற வகையில் பேசியதை கண்டித்தும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை உடனடியாக வழங்கிடவும், காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து நிவாரண வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள், மற்றும் இடைக்குழு செயலாளர்கள் சி.சந்திரகுமார், பா.பாலசுந்தரம், சி.பக்கிரி சாமி, சோ.பாஸ்கர், அ.கலிய பெருமாள், சீனி.முருகையன், தி.திருநாவுக்கரசு,வெ. சேவையா, ம.விஜயலட்சுமி, த.கண்ணகி, ஆர்.பி. கருப்பையா, த.காரல்மார்க்ஸ், ஆர்.ஆர். முகில், பி.குணசேகரன், வாசு. இளையராஜா, சி.வீரமணி, வி.தட்சிணா மூர்த்தி,க.பூபேஷ் குப்தா,ச. வடிவேல் மூர்த்தி, நா.சௌந்தர ராஜன்,து. ஸ்ரீதர், எம்.எம்.சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் மாநகர செயலாளர் ஆர்பி. முத்துக்குமரன் நன்றி கூறினார்.

94380cookie-checkதஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

Leave a Reply

error: Content is protected !!