மாநாடு 21 November 2022
தஞ்சாவூரில் 22-11-2022 செவ்வாய்க்கிழமை நாளை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகின்ற காரணத்தினால் இந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் என்று உதவி செயற்பொறியாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
அதன்படி சாலியமங்கலம் உதவி செயற்பொறியாளர் எஸ்.நல்லையன் கொடுத்திருக்கிற செய்தியில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், ஞானம் நகர், சித்தர் காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்குடி ,நெட்டாநல்லூர், எடவாக்குடி, காந்தவனம், குளிச்சப்பட்டு, பனங்காடு, யாகப்பா சாவடி, அம்மா குளம், அன்னை இந்திரா நகர் பகுதிகளில் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது,
அதேபோல ஒக்கநாடு கீழையூர், ஒக்கநாடு மேலையூர், வன்னிப்பட்டு, காவாரப்பட்டு, பேரையூர், கருவாக்குறிச்சி, சமயன் குடிக்காடு, குலமங்கலம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் என்று ஒரத்தநாடு உதவி செயற்பொறியாளர் சுரேஷ் அறிவித்திருக்கிறார்.