மாநாடு 28 June 2026
தஞ்சாவூர் மாநகராட்சி உதவி பொறியாளராக பணியாற்றி பண்ருட்டி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள T.கார்த்திகேயன் மீது அடுத்தடுத்து பரபரப்பு குற்றச்சாட்டுகள்.
இவர் தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றியபோது FIR Number 2/2020 ஆம் ஆண்டு ஒரு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கும், எஃப் ஐ ஆர் எண் 8/2025 பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குப்பை கிடங்கு 10 கோடி ரூபாய் ஊழல் மோசடி வழக்கும் லஞ்ச ஒழிப்புத்துறையால் ஐபிசி “409, 420, மேலும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகள்: 120(B), 409, 465, 468, 471 மற்றும் 109 ஊழல் தடுப்புச் சட்டம் 1988 (2018-ல் திருத்தப்பட்டது) பிரிவுகள்: 13(2), 13(1)(a) மற்றும் 12.பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டு இன்னும் நிலுவையில் உள்ளன.
2020 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி விசாரிக்கவும் வலியுறுத்தி உள்ளோம்.

இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றியதாக
தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் இவர் மீது தனி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்று உலா வருவதாக தெரியவரும் உதவி பொறியாளர் T.கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மீது “என்னிடம் லஞ்சமாக பணம் கேட்டார், நான் லஞ்சம் கொடுத்தேன், மேலும் பணம் கேட்டார்” நான் பணம் தர மறுத்ததால் செட்டிங் செய்து என் மீது எஃப் ஐ ஆர் போட்டிருக்கிறார் என எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்ததாக ஒரு டெம்ப்ளேட்டை தயார் செய்து, அதில் அந்த இன்ஸ்பெக்டரின் புகைப்படத்தை இணைத்து சமூக வலைதளங்களில் இவருக்கு ஆதரவாக உள்ளவர்களை வைத்து பரப்பியுள்ளார்.
“லஞ்சம் கொடுத்தேன்” என அவரே எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளதால், ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 12-ன்படி லஞ்சம் கொடுத்தவரும் குற்றவாளிதான். தானே குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகும் இவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஏன் இதுவரை தனி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை?
இது ஐபிசி 186, 189, 500 பிரிவுகளின்படி அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் மிரட்டல் குற்றமாகும்.
அதேபோல, அனைத்து செய்திகளையும் அதிரடியாக அச்சமின்றி வெளியிட்டு வரும் அரசு பதிவு பெற்ற ‘அரசியல் மாநாடு‘ இதழின் ஆசிரியரை குறிவைத்து தொடர்ச்சியாக சிலரின் உறுதுணையோடு கூட்டாக டெம்ப்ளேட் தயார் செய்து “பிச்சை எடுக்கிறான், இவன் பத்திரிகையாளரே அல்ல, என மிக கேவலமாக சித்தரித்து, புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பி வருகிறார். நேரடியாகவும், ஆட்களை வைத்தும் இந்த அவதூறு பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். இதற்கான ஸ்கிரீன்ஷாட் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் புகாருடன் இணைத்து கொடுக்கப்பட்டுள்ளன.
இது வெறும் தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66D, 67 மட்டுமல்ல. ஐபிசி 120B கூட்டுச்சதி, 506(ii) கொலை மிரட்டல், 385 மிரட்டி பணிய வைக்க முயற்சி, 504 அவமானப்படுத்தி கலவரம் தூண்டுதல், 153A வெறுப்பு பரப்புதல், 500 அவதூறு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டிய கடுமையான குற்றமாகும். பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் இச்செயல் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19(1)(a)-ஐ மீறும் செயல். இந்திய குடிமகனுக்கு ஊழலை தடுக்க வேண்டிய அடிப்படை கடமை உள்ளது. அதன் அடிப்படையில் எழுத்து சுதந்திரத்தோடு செயல்படும் பத்திரிகை ஆசிரியரை தொழில் செய்யவிடாமல் தடுப்பது Art 19(1)(g), Art 21 மீறல் ஆகும்.
மேலும், இவருக்காக இவரது பதவி உயர்வுக்காக தஞ்சாவூர் மாநகராட்சி விதிகள் தளர்த்தப்பட்டதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. விதிகளை மீறி பதவி உயர்வு வழங்கப்பட்டது ஏன் அதற்காகவே இறக்கப்பட்டவரா இவர் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. மூன்று கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தும், அரசாணை எண் 173, P&AR துறை நாள்: 09.11.2001-ஐ மீறி பணியிடை நீக்கம் செய்யாமல் இன்னும் வைத்திருப்பது சட்டவிரோதம்.
ஒரு அரசு ஊழியர் பணி ஓய்வுக்கு பின் கிடைக்கும் பணத்தை நம்பி நமது பணி ஓய்வுக்குப் பிறகு உள்ள காலங்களில் மானம் மரியாதையோடு வாழலாம், நமது குடும்பத்தினருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யலாம் என்று நேர்மையாக வேலை செய்வார். ஆனால் இவரது செயல்பாடுகளை பார்க்கும்போது, பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும் பணம் ஒரு பொருட்டல்ல, அதைவிட அதிகமாக நேர்மையற்ற முறையில் சேர்த்த பல கோடி நம்மிடம் இருக்கிறது, எதையும் செய்யலாம்” என்ற நோக்கில்தான் அரசு பதிவு பெற்ற பத்திரிகை ஆசிரியரையும், காவல்துறை இன்ஸ்பெக்டரையும் மிரட்டுகிறார்.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டு, அது

கிழக்கு காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அங்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154-ஐ மீறி, உச்சநீதிமன்றத்தின் Lalita Kumari vs Govt of UP தீர்ப்பை மீறி, Cognizable offence-க்கு உடனடியாக FIR பதிவு செய்யாமல் “லீகல் ஒப்பீனியன்” என காலம் தாழ்த்தி வருகின்றனர். CrPC 154 படி அவதூறு, மிரட்டல், கூட்டுச்சதி புகார் கிடைத்தவுடன் உடனடியாக FIR பதிய வேண்டும். சட்ட ஆலோசனை தேவையில்லை. இதை மீறுவது நீதிமன்ற அவமதிப்பாகும்.
இவர் மீது ஏற்கனவே லோக் ஆயுக்தா, லஞ்ச ஒழிப்புத்துறை, நகராட்சி நிர்வாக இயக்குநர் சென்னை, மாவட்ட திட்ட ஆய்வுக்குழு, முதலமைச்சர் தனிப்பிரிவு ஆகியவற்றில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில மனித உரிமை ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட உள்ளது. இவ்வளவு துறைகளில் புகார் இருந்தும்,
தஞ்சை மாவட்ட காவல்துறையில் உள்ள ஒரு “காக்கி” மற்றும் சிலரின் உறுதுணையோடு இவர்கள் காப்பாற்றப்படுவதாக தெரிகிறது.
“லஞ்சம் கொடுத்தேன்” என தானே எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்ட பிறகும் ஏன் லஞ்ச ஒழிப்புத்துறை உதவி பொறியாளர் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை? மூன்று கிரிமினல் வழக்குகள், ஏன் பணியிடை நீக்கம் கூட செய்யவில்லை? குழுவாக சேர்ந்து வன்மத்தோடு எந்தவித அச்சமும் இன்றி செயல்படும் இவர் மீது ஏன் இன்னும் பெரிய நடவடிக்கை இல்லை? பத்திரிகை ஆசிரியரின் உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் அரசு நிர்வாகம் ஏன் மௌனம் காக்கிறது?
சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் தான்?
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒரு சட்டம் | உதவி பொறியாளர் கார்த்திகேயனுக்கு ஒரு சட்டமா ?
மேலும் அதிரடி செய்திகளோடு ஜூலை மாத அரசியல் மாநாடு இதழ்.
