மாநாடு 04 July 2026
திருச்சி அண்ணாசிலை அருகிலுள்ள கீழச் சிந்தாமணியின் பூசாரித்தெருவிற்கு செல்லும் குறுக்குச்சாலையின் நுழைவுப்பகுதியானது பொதுமக்கள் வாகனங்களில் செல்ல ஏதுவாக இல்லாத சூழலில் பல மாதங்களாக சேதமடைந்து உள்ளது.

ஏறத்தாழ 300 குடும்பங்களுக்கு மேல் பயன்படுத்தும் பிரதானப் பிரிவாக இந்த நுழைவுப் பகுதி உள்ளது.
மேலும் இந்த சேதமடைந்த பகுதியினை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளும், சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவ மற்றும் மாணவிகளும் சிரமப்படுகின்றனர்.
அவ்வப்போது சிறுசிறு விபத்துக்களும் ஏற்படும் அவலநிலை உள்ளது.
ஆகவே, பொதுமக்கள் சிரமங்களை கருத்தில் கொண்டு சாலையின் நுழைவுப்பகுதியை சீரமைத்துத் தருமாறு திருச்சி மாநகராட்சி நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள் .
