மாநாடு July 2026
தஞ்சாவூர் மாநகராட்சியில் மக்களின் வரிப்பணம் எப்படி பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்படுகிறது என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி. விதிமுறைகளை காலில் போட்டு மிதித்து, சீனியாரிட்டியை குப்பையில் வீசி, சட்டத்தை சாக்கடையில் தள்ளிவிட்டு நடந்திருக்கிறது ஒரு பதவி உயர்வு நாடகம்.
11.10.2017 அன்று உதவிப்பொறியாளர் க. அறச்செல்வி கும்பகோணம் நகராட்சிக்கு பணியிட மாற்றம். உத்தரவு வெளியாகிறது. 12.10.2017. காலை 11 மணி. மாமன்றம் கூடுகிறது. நேற்று காலி செய்யப்பட்ட அதே பணியிடத்திற்கு வரைவாளராக பணியாற்றிய த. கார்த்திகேயனை இளநிலைப் பொறியாளராக பதவி உயர்வு வழங்க தீர்மானம். 24 மணி நேரம். ஒரு காலிப்பணியிடம் உருவாக்கப்பட்டு, அடுத்த நாளே நியமனம். இது செயற்கையாக உருவாக்கப்பட்ட காலிப்பணியிடம். வேறு எந்த விளக்கமும் இதற்கு இல்லை.
தமிழ்நாடு நகராட்சி பொறியியல் மற்றும் குடிநீர் வழங்கல் பணி விதிகள் 1996 மிகத் தெளிவாக சொல்கிறது. Junior Engineer பதவிக்கு பதவி உயர்வு பெற வேண்டுமென்றால் Diploma in Civil or Mechanical Engineering முடித்திருக்க வேண்டும். அத்தோடு Technical Assistant அல்லது Draughtsman பணியிடத்தில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றியிருக்க வேண்டும். Skilled Assistant Grade-II, Work Inspector, Draughtsman, Junior Engineer என்ற படிநிலையில் சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு. ஒரு படி கூட தாண்டக்கூடாது. இது சட்டம். இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 309-ன் கீழ் உருவாக்கப்பட்ட பணி விதிகளுக்கு சட்ட அந்தஸ்து உண்டு. அதை மீறுவது அரசியலமைப்பையே மீறுவதற்கு சமம்.
ஆனால் த. கார்த்திகேயன் விஷயத்தில் நடந்தது என்ன? 20.10.2015 அன்றுதான் Work Inspector பணியிடத்தில் இருந்து Draughtsman ஆக பதவி உயர்வு. 2015 அக்டோபர் முதல் 2017 அக்டோபர் வரை வெறும் 2 ஆண்டுகள் மட்டுமே Draughtsman. விதி சொல்வது 5 ஆண்டுகள். ஆனால் 2 ஆண்டுகளிலேயே 13.10.2017 அன்று Junior Engineer ஆக அடுத்த பதவி உயர்வு. 5 ஆண்டு விதியை 2 ஆண்டாக சுருக்கியது யார்? எந்த சட்டம் அனுமதி கொடுத்தது சார்? எந்த அதிகாரி கையெழுத்து போட்டார்? சீனியாரிட்டி பட்டியல் எங்கே? த. கார்த்திகேயனுக்கு முன்னால் எத்தனை பேர் வரிசையில் இருந்தார்கள்? அவர்கள் எல்லாம் என்ன பாவம் செய்தார்கள்? இந்த கேள்விகளுக்கு மாநகராட்சி நிர்வாகத்திடம் பதில் இருக்கா சொல்ல நீங்க தயார் என்றால் வெளியிட நானும் தயார் .

அரசாணை எண்.61, நாள் 04.03.2016 இன்னும் பெரிய தில்லுமுல்லு. ஒருங்கிணைந்த மாநகராட்சி அமைந்த பின் பணிமூப்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது அரசாணை. ஆனால் அந்த நிபந்தனைக்கு “தளர்வு” கோரி பின்னேற்பு வழங்க அரசுக்கு பரிந்துரை. பணிமூப்பு நிர்ணயம் செய்யாமலே பதவி உயர்வு. விதிகளை தளர்த்துவது யாருக்காக? தனி நபருக்காக அரசாணையையே வளைக்கும் அதிகாரம் யார் கொடுத்தது? இது சட்டத்தை சாகடிக்கும் செயல் தானே.
பணிச்சுமை காரணமாக பதவி உயர்வு என மாமன்ற தீர்மானத்தில் காரணம் காட்டப்பட்டுள்ளது. நல்ல நகைச்சுவை. பணிச்சுமை இருந்தால் ஏற்கனவே இருக்கும் உதவிப்பொறியாளரை ஏன் கும்பகோணத்திற்கு மாற்ற வேண்டும்? ஒரு பக்கம் ஆள் பற்றாக்குறை என்று சொல்லி பதவி உயர்வு. மறுபக்கம் இருக்கும் ஆளை வெளியே அனுப்பு. இது பச்சை அயோக்கியத்தனம். பதவி உயர்வுக்காகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட காலிப்பணியிடம் இது. வேறு எந்த விளக்கமும் இதற்கு இல்லை. உள்நோக்கம் இல்லாமல் இப்படி நடக்க வாய்ப்பே இல்லை.
இந்த பதவி உயர்வுக்கு பிறகுதான் தஞ்சாவூர் மாநகராட்சியில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் அரங்கேறியுள்ளன. திருமனூர் நீரேற்று நிலையம், வெண்ணாறு நீர்த்தேக்க தொட்டி, கணபதி நகர் நீர் உந்து நிலைய பராமரிப்பு பணிகளில் போலி பில்கள் மூலம் நடந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை 2020-ம் ஆண்டு FIR எண். 02/2020 பதிவு செய்துள்ளது. 2018 முதல் 2023 வரை குப்பை கிடங்கில் Bio-Mining பணியில் 2,30,000 மெட்ரிக் டன் குப்பை அகற்றும் பணியில் நடந்த முறைகேடு தொடர்பாக 2025-ம் ஆண்டு FIR எண். 08/2025 பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு வழக்குகளிலும் த. கார்த்திகேயன் பெயர் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. அனைத்திலும் இவர் பெயர் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி விதிமீறி பதவி உயர்வு வழங்கப்பட்டால் சட்டப்படி என்ன தண்டனை? தமிழ்நாடு அரசு பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டம் பிரிவு 20-ன் படி விதிமுறைகளை மீறி வழங்கப்பட்ட பதவி உயர்வு செல்லாது. அரசு எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம். பதவி உயர்வு மூலம் பெற்ற சம்பள பாக்கியை கடைசி பைசா வரை திரும்ப வசூலிக்கலாம். தமிழ்நாடு சிவில் சர்வீசஸ் ஒழுங்கு விதிகள் 1973-ன் கீழ் விதிமீறலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யலாம். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 167 – பொது ஊழியர் சட்டவிரோத ஆவணம் தயாரித்தல், பிரிவு 120B – குற்றச்சதி, பிரிவு 409 – நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கு பதியலாம். ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பிரிவு 13(1)(d) – பதவியை தவறாக பயன்படுத்தி ஆதாயம் அடைதல் என்ற பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை உண்டு. நிதி இழப்பை Revenue Recovery Act மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்துக்களை ஜப்தி செய்து வசூலிக்கலாம். விதிமீறலுக்கு ஒப்புதல் அளித்த ஆணையர், நகராட்சி நிர்வாக அதிகாரிகள் அனைவர் மீதும் ஊழல் தடுப்பு சட்டம் பாயும். கையெழுத்து போட்ட ஒவ்வொருவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
ஏழை குடிமகன் வியர்வை சிந்தி உழைத்து கட்டும் ஒவ்வொரு ரூபாய் வரிப்பணத்தில்தான் இந்த நிர்வாகம் இயங்குகிறது. அந்த வரிப்பணத்தில் இருந்துதான் அதிகாரிகளுக்கு சம்பளம், படி, பென்சன் என அனைத்தும் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த மக்களை ஏமாற்றி, சட்டத்தை காலில் போட்டு மிதித்து, விதிமுறைகளை குப்பையில் வீசிவிட்டு முறைகேடுகளில் ஈடுபட்டால் அது நாட்டுக்கே கேடு. வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் போல சர்வ சாதாரணமாக சட்டத்தை மீறினால் என்ன ஆகும்? பணிகள் செய்தது போல காட்டப்பட்ட கணக்குகள் நோட்டில் இருக்கும்! நாடு தஞ்சாவூர் பல சாலைகள் போல நாறி கிடக்கும்!

குடித்துவிட்டு பத்திரிக்கையாளர் என்கிற போர்வையில் சுற்றுகிறவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான்.
“படித்துவிட்டு பத்திரிக்கை நடத்த வந்த மாநாடு ஆசிரியர் போல உள்ளவன் இதை மக்கள் முன் கொண்டு சென்று போலிகளின் முகமூடியை கிழிப்பான்.
இந்த பதவி உயர்வு தொடர்பாக த. கார்த்திகேயனின் கல்விச் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ், சீனியாரிட்டி பட்டியல், மாமன்ற தீர்மான நகல் ஆகிய ஆவணங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1)-ன் கீழ் ஏற்கனவே கேட்டுள்ளோம். ஏற்கனவே ஒருமுறை தனிநபர் தகவல் என்று காரணம் காட்டி மறுத்தது போல இப்போது மறுத்தால், அடுத்த இதழில் அந்த மறுப்பு கடிதத்துடன் சேர்த்து முழு விவரத்தையும் வெளியிடுவோம்.
