Spread the love

மாநாடு 07 July 2026

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் கடந்த அக்டோபர் 2 2014 அன்று முதல் தூய்மை இந்தியா திட்டம்( ஸ்வச் பாரத்) நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.

இதன் தொடரச்சியாக நடப்பு ஆண்டு ஜூலை முதல் வாரம் தூய்மை இந்தியா வாரமாக அனுசரிக்கப்பட்டு அதற்கான வழிமுறைகளும் அரசு வழங்கியுள்ளது, இதன் ஒரு பகுதியாக தேசிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புள்ளியியல் துறை, தஞ்சாவூர் துணை மண்டல அலுவலகம் சார்பில் இன்று தூய்மை இந்தியா தலைப்பில் விழிப்புணர்வு பேரணி தஞ்சை பெரிய கோவில் நுழைவு வாயிலிலிருந்து சீனிவாசபுரம் கிரி ரோட்டில் அமைந்துள்ள தேசிய புள்ளியில் அலுவலகம் வரை பேரணி நடத்தப்பட்டது. இதன் முக்கிய நோக்கமான சுற்றுப்புற தூய்மை மற்றும் சுகாதார மேப்பாடு பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வினை தஞ்சாவூர் புள்ளியியல் துணை மண்டலத்தின் உதவி இயக்குநர் ரா. சின்னதுரை, I,S,S. அவர்களின் ஏற்பாட்டிலும், முதுநிலை புள்ளியியல் அதிகாரி மா. ரவிகுமார் பட்டில், SSO அவர்களின் தலைமையிலும் பேரணி நடைபெற்றது.

92830cookie-checkதூய்மை இந்தியா திட்டம், விழிப்புணர்வு பேரணி தஞ்சாவூரில் நடைபெற்றது

Leave a Reply

error: Content is protected !!