Spread the love

மாநாடு 12 July 2022

தஞ்சாவூரில் உள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் இன்று சசிகலா தலைமையில் இருப்பதாக கூறப்படும் அதிமுகவில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் தொடங்கிய அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சசிகலாவிற்கு செங்கோல் வழங்கப்பட்டது, அதன் பிறகு மேடையில் பேசிய திவாகரன் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது சசிகலாவை ஏதாவது ஒரு தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற வைக்க வேண்டும் என்று விரும்பினார், அதை இவரிடமும் கூறினார் ,ஆனால் சசிகலா அதை ஏற்காமல் அன்பாக புறக்கணித்தார் ,அதன் விளைவு தான் இன்று சசிகலா இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் அப்போதே ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டு ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வென்று இருந்தால் இந்த நிலை சசிகலா அவருக்கு ஏற்பட்டிருக்காது. எங்கள் வீட்டு கதவை திறந்து விட்டவர்கள் கூட பதவி பெற்றார்கள், சசிகலாவால் அண்ணா திமுகவில் பதவிக்கு வந்தவர்கள் ஏராளமானோர் அவர்கள் எல்லாம் இப்போது நன்றியை மறந்து விட்டார்கள்.

அதிமுக எப்போதெல்லாம் தொய்வு ஏற்பட்டு சோதனைக்கு உள்ளாகிறதோ, அப்போதெல்லாம் சசிகலாவும், நடராஜனும் அதிமுகவிற்கு அரணாக இருந்து கட்சியை காப்பாற்றி தூக்கி விட்டிருக்கிறார்கள், அப்படிப்பட்ட சசிகலா இப்போது இருக்கும் நிலையை என்னால் பார்க்க முடியவில்லை எனவே சசிகலாவின் கரத்தை வலுப்படுத்துவதற்காக எனது கட்சியை இணைக்கிறேன் என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார்.இதை பார்த்த சசிகலாவும் அழுதுவிட்டார்.

பிறகு பேசிய சசிகலா எம்ஜிஆர் காலங்களிலும் ,ஜெயலலிதா காலங்களில் கூட கட்சியிலிருந்து பலர் வெளியேறி இருக்கிறார்கள் அவர்களையெல்லாம் கட்சியின் வளர்ச்சி நலன் கருதி மீண்டும் அதிமுகவில் இணைத்து இருக்கிறோம். ஏதோ போதாத காலம் ஜெயலலிதா இறந்த பிறகு நான் சிறைச்செல்ல வேண்டியது ஆயிற்று. அதன் பிறகு எங்கள் கட்சியில் விரும்பத் தகாத நிகழ்வுகள் எல்லாம் நடந்தேறி விட்டது. கட்சியில் இருந்து வெளியேறியவர்களை ஒருபோதும் நாங்கள் வெறுத்து அந்நியராக பார்க்க மாட்டோம் மீண்டும் அவர்களை இணைத்து கட்சியை வலிமைப்படுத்தி வழிநடத்துவோம் அதேபோல இப்போதும் செய்வேன் . தற்போது நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களை மிகவும் வருத்தப்பட வைத்திருக்கிறது. அனைவரையும் ஒன்றிணைத்து மீண்டும் எங்கள் அதிமுகவை பழைய பொலிவோடு நடத்தி காட்டி எதிரிகளை வெல்வோம், இதற்காகவே எனது எஞ்சிய காலம் முழுமைக்கும் உழைப்பேன் நான் இருக்கும் வரை அதிமுகவை யாரும் அழிக்கவோ அபகரிக்கவோ முடியாது 2016 இல் கூட்டப்பட்டது தான் முறையான அதிமுக பொதுக்குழு அதன் பிறகு கூட்டப்பட்டதும் விதிகள் மாற்றப்பட்டதும் ஒருபோதும் செல்லாது என்றார் சசிகலா.

43020cookie-checkகண்ணீரில் திவாகரன் சபதம் எடுத்தார் சசிகலா

Leave a Reply

error: Content is protected !!