Spread the love

மாநாடு 28 May 2026

உங்களோடு நான்..

தற்காலத்தில் வாழும் நமக்கு முற்காலத்தைப் பற்றி அறிய உதவுவது கல்வெட்டுக்களும், பல்வேறு விதங்களில் முன்னோர்கள் எழுதி காத்து வைத்த எழுத்துக்களுமே என்றால் மிகையல்ல.

அவ்வாறான எழுத்துக்களில் பல மிகவும் பொறுப்புணர்ந்து எழுதப்பட்டு இருப்பதால் தான் ஆய்ந்து படிக்க நினைப்பவர்களுக்கும் ஆராய்ச்சி செய்பவர்களுக்கும் அக்கால வாழ்வியலையும், வரலாற்றையும் தெள்ளத் தெளிவாக தெரிய செய்கிறது.

இப்படிதான் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையில் அந்த காலகட்டத்தில் வாழ்பவர்களின் வாழ்வியலையும் வரலாறுகளையும் பதிவு செய்து பிரதிபலிக்க பல்வேறு கருவிகள் இருந்து வருகிறது. நாட்கள் செல்லச் செல்ல கால மாற்றத்திற்கு தகுந்தாற்போல் அக்கருவிகளும் மாறத் தொடங்கியது. அப்படிதான் கல்வெட்டுக்களில், பானைகளில், பனை ஓலைகளில், ஓடுகளில் என்று வாழ்வியலை பதிவு

செய்து வந்த நமது எழுத்துக்கள் இன்று பரிணாம வளர்ச்சியில் ஓடுகளில் வலம் வந்த எழுத்துக்கள் அச்சு ஏடுகளிலும், மின்னேடுகளிலும், வலம் வந்து கொண்டிருக்கிறது, அது மட்டுமல்லாமல் கலை வடிவங்களிலும், காட்சி ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் பல செய்திகளை தற்கால வாழ்வியலை பதிவு செய்து கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில் பிரின்டிங் மீடியா மட்டுமே இருந்தது அதன் பிறகு டிஜிட்டல் மீடியா, விஷுவல் மீடியா என்று இன்று ஊடகம் பறந்து விரிந்து பரிணாம வளர்ச்சி பெற்று இருக்கிறது இதை புரிந்து கொண்ட , நன்கு தெரிந்து கொண்டவர்கள் , படித்தவர்கள், பண்பட்டவர்கள், பொறுப்புணர்ந்து செய்திகளை, கால நிகழ்வுகளை பதிவு செய்து கொண்டே இருக்கிறார்கள் . அதன்படி தான் அரசியல் மாநாடு இதழிலும் மாநாடு செய்தி குழுமத்திலும் தெள்ளத் தெளிவாக செய்திகளை பதிவு செய்து வருகிறோம் என்பதை நமது வாசகர்கள் நன்கு அறிவீர்கள் அதனால் தான் தொடர்ந்து அரசியல் மாநாடு இதழை வாங்கி படித்து மற்றவர்களுக்கும் பரிந்துரைத்து தொடர்ந்து ஆதரவு தந்து என்னை இயங்க ஊக்குவிக்கிறீர்கள் உங்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலே குறிப்பிட்டது போல ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகம் எப்படி இருக்கிறது என்பதை ஏதோ ஒரு வகையில் பதிவுகளின் மூலம் அறிய

முடியும் உதாரணத்திற்கு திரைப்படப் பாடலை எடுத்துக் கொண்டால் சிறிது காலத்துக்கு முன்பு வந்த பாடல்களில் மலர்களை உவமையாக வைத்து எழுதப்பட்ட பாடல்களில் சிலவற்றின் வரிகளை பாருங்கள் அப்போது எந்தெந்த பூக்களை வைத்துச் சொன்னால் அதிகமானவர்களுக்கு புரியுமோ, அதிகமானவர்களை சென்றடையுமோ அதை தான் பயன்படுத்தி இருப்பார்கள்.

மல்லிகை பூ பூத்திருக்கு அது மழையில் நனைஞ்சிருக்கு…

அடுக்கு மல்லி எடுத்து வச்சேன்…

செந்தாழம் பூவில் வந்தாடும்

தென்றால்…

ரோஜா ரோஜா…

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…

அதையே சமீபத்தில் அனைவருக்கும் சென்று சேரும் விதத்தில் …

கஞ்சா பூ கண்ணால …

என்று பாடல் வரிகளை எழுதுகிறார்கள் என்றால் இதுதான் தற்போது உள்ள சமூகத்தின் சூழல்… இதை எவ்வளவுதான் மறைத்தாலும்

எந்த வகையிலாவது யார் மூலமாவது வெளியே வந்து விடும் என்பதே எதார்த்தம்.

அப்படிதான் பல செய்திகளை சிலர் மறுக்க பார்த்தாலும், மறைக்க பார்த்தாலும் அந்த செய்திகளை வெளியில் கொண்டு வந்து சமூகத்தில் பல்வேறு நல்ல மாற்றங்களை மாநாடு செய்தி குழுமம் செய்து கொண்டே இருக்கிறது, தொடர்ந்து உங்களது ஆதரவை பொருளாதார ரீதியிலும் தந்து ஊக்கப்படுத்துங்கள் , பொருளாதாரம் இல்லாத நிறுவனம் என்றாலும் தராதரம் இல்லாத செய்திகளை ஒருபோதும் தராது மாநாடு. நான் என்றும் உங்களோடு…

90960cookie-checkஉங்களோடு நான் ..

Leave a Reply

error: Content is protected !!