Spread the love

மாநாடு June 2026

நேசமிகு உறவுகளுக்கு வணக்கம்
எப்போதுமே, யாரையுமே எந்நேரத்திலும் அலட்சியப்படுத்தவோ , ஏளனமாக நினைக்கவோ கூடாது .

இந்த பிரபஞ்சம் அடுத்த நொடியில் ஆயிரம் அதிசயங்களை நிகழ்த்தும். நிகழ்த்திக் கொண்டே இருக்கும் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் இருக்கிறது.
சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த 2026 சட்டமன்றத் தேர்தலை கூட முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்தத் தேர்தலில் எந்தத் தேர்தலிலும் இல்லாத பல நிகழ்வுகள் நாள்தோறும் நடந்து கொண்டே இருந்தது.காலம் காலமாக திமுகவை, அதிமுகவில் இருந்து எதிர்த்த தலைவர்கள் திமுகவில் இணைந்து திமுக சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டார்கள் , மேலும் அதிமுகவில் என்ன காரணத்திற்காகவோ, என்னென்ன காரணத்தையோ சொல்லி பிரிந்திருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் டிடிவி.தினகரன் திடீரென பாஜக கூட்டணியோடு அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்று கூட்டணியாக ஒன்றிணைந்தார் என்பதையும்,
அதுவரை அதிமுகவில் இருந்தவர்களும், நீக்கப்பட்ட சிலரும் அதிமுகவை மீட்க போகிறோம் என்று நின்றவர்கள் கூட அணிகள் மாறி.. மாறி தேர்தலை சந்தித்தார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியில் பிளவுகள் ஏற்பட்டு பலரும் பலவிதமாக பேசும் படியானதையும் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

இந்நிலையில் கட்சித் தொடங்கி கடந்த 16 ஆண்டுகளாக எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தேர்தல்களை சந்தித்து வந்த சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்துவத்தோடு தனது தத்துவங்களை முன்வைத்து எல்லோருக்கும் முன்னாடி வேட்பாளர்களையும் அறிவித்து இந்த தேர்தல் பரப்புரையிலும் பட்டையை கிளப்பிக் கொண்டு இருந்தது.

இதற்கு நடுவில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் கட்சி ஆரம்பித்த பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகவே இருந்தது, பல இடங்களிலும் அவர்கள் முழுமையாக பரப்புரைக்கு செல்லவில்லை என்பதும் அவர்களை இவர்கள் யாருமே கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை , ஒரு சாரார் இவர்களெல்லாம் ஒரு ஆளே இல்ல, இவர்களை லெப்ட் ஹாண்டில் ஹேண்டில் பண்ணுவோம் என்று பேசியவர்களும் இங்கு உண்டு .

தவெகவினரை தற்குறிகள் என்று வசை பாடுவதிலும், எள்ளி நகையாடுவதிலுமே.. சதாகாலமும் இருந்ததால், தங்கள் கட்சியின் கொள்கைகளை, தங்களது கட்சி வென்று வந்தால் என்ன செய்வோம் என்று முழுமையாக மக்களிடம் சொல்வதை விட்டுவிட்டு லாவணி கச்சேரி பல இடங்களிலும் நடந்ததையும் மண்ணின் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.

இதற்கிடையே வாயை வைத்து ஏதாவது பேசி ,ஏதாவது எழுதி,.. ஊடகவியலாளர்கள் என்றால் யார்? அவர்களின் கடமை என்ன என்பதை தெரியாமல், அறியாமல் இருக்கும் சிலர் கருத்துக்கணிப்பு என்கிற பெயரில் கைநீட்டியவர்களுக்கு கனகச்சிதமாக குறி சொல்லிக்கொண்டு [ கருத்து திணிப்பு ] கருத்துக்கணிப்பு போட்டுக் கொண்டிருந்ததையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம்.

ஒவ்வொரு தனிமனிதனுக்குமே தனி விருப்பம் இருக்கும் நடுநிலையாளர்கள் என்று இங்கு யாருமே கிடையாது என்பதுதான் உண்மை. தான் நினைத்தவர்கள், நாம் இருக்கும் கட்சி, நாம் ஆதரிப்பவர்கள் வெல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு தனி மனிதனின் விருப்பமாக தான் இருக்கும் ஆனால் ஊடகவியல் என்பது வேறு, அதற்கு நாம் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

நேற்று வரை ஒரு கட்சி ஆட்சியில் இருந்தது இன்று ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது நாளை எது வேண்டும் என்றாலும் நிகழும் . ஆனால் ஊடகவியலாளர்கள் எந்த கட்சி ஆள்கிறது என்பதை பார்த்து ஆள் பார்த்து செய்தி செய்தால் அது அறமாக இருக்காது.

தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஒரு காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தான் மு.க.ஸ்டாலினுக்கும், சீமானுக்கும், விஜய்க்கும் நமக்கும் முதல்வர் | பிறகு மு.க.ஸ்டாலின் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கும், சீமானுக்கும், விஜய்க்கும், நமக்கும் முதல்வர் | இப்போது விஜய் தான் மு.க.ஸ்டாலினுக்கும் , எடப்பாடி பழனிச்சாமிக்கும், சீமானுக்கும் நமக்கும் முதல்வர்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக முடியவில்லை என்கிறபோது பலரும் பலவிதத்தில் அரசை விமர்சிக்கின்றோம் என்கிற பெயரில் தங்களுக்கான வயிற்று எரிச்சலை கொட்டிக் கொண்டிருப்பதாகவே சாமானிய மக்கள், பொதுமக்கள் கருதுகிறார்கள். மேலும் ஊடகவியலாளர் என்கிற பெயரில் சிலர் கொட்டும் கொடுஞ்சொற்களையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது தொடர்ந்தால் மேலும் விஜய்க்கு ஆதரவையும், இவர்கள் மீது ஒருவித அருவருப்பையும் தான் ஏற்படுத்தும் இதுதான் தேர்தலிலும் நடந்தது.

உண்மையிலேயே உளப்பூர்வமாக தவறுகளை சுட்டிக்காட்டி அதனை அரசு திருத்திக் கொள்ளாமல், வம்படியாக நின்றால்.. அல்லது ஆட்சி அமைத்து ஒரு நூறு நாள் ஆன பிறகும் எந்தவித பணிகளும் நடக்காமல் நிலைமை சீர்குலைந்தால் சிறப்பாக அனைவரும் சேர்ந்தே நமது அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி , கேள்வி எழுப்பி மக்களுக்கான பணிகளை செய்ய வைக்க வேண்டும் அதுதான் சரியான நிலைப்பாடாக இருக்கும்…

அடிப்படை கடமைகள் என்றால் என்ன? அடிப்படை உரிமைகள் என்றால் என்ன ? அடிப்படை சட்டங்கள் என்ன சொல்கின்றது.. என்பதை எல்லாம் அறிந்த நிறுவனம் “மாநாடு செய்தி குழுமம்” என்பதால் தான் ஒவ்வொன்றையும் கடமை உணர்ந்து மக்களுக்கு வெளியிடுகிறோம். இனியும் இப்படி தான் ஊடகப் பணியை செய்வோம். டிஜிட்டல் யுகம் இது என்பதை மறந்து, எது ஒன்றிலும் அப்டேட் ஆகாமல், எந்த கட்சிக்கு ஓட்டு போடுவீங்க நீங்க என்று அட்டைப்பெட்டியில் வாக்கெடுப்பு ஒருபோதும் நடத்த மாட்டோம் நாம்.

ஏனென்றால் ஒரு காலத்தில் ஓலையில் எழுதியது வளர்ச்சி பெற்றது ,.. பிரின்டிங் மீடியா வந்தது . பிறகு டிஜிட்டல் மீடியா.. தற்போது விசுவல் மீடியா என்று பல்வேறு பரிணாம வளர்ச்சியில் படு வேகமாக ஓடி வளர்ந்து கொண்டிருக்கிறது மீடியா. இன்னமும் அப்டேட் ஆகாத சிலரும் ஊடகவியலாளர்கள் என்கிற பெயரில் அலைந்து கொண்டு, அக்கப்போர் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் அவர்களை போன்றோர்களுக்கும் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் ஒரு செய்தியை சொல்லிச் சென்று இருக்கிறது.

“பிச்சைக்காரனாக இருந்தாலும் துச்சமாக நினைக்கக் கூடாது! இந்த பிரபஞ்சம் யாரை, எங்கு , எப்போது, எப்படி வைக்கும் என்பது யாருக்குமே தெரியாது !

” மாநாடு” இனிவரும் காலங்களிலும், இந்த மண்ணின் மீட்சிக்காக, மக்களுக்கான நல்ல ஆட்சிக்காக மக்களின் குரலாக , மக்களோடு நின்று தொடர்ந்து பேசும் மாநாடு ! நான் என்றும் உங்களோடு !

92070cookie-checkஉங்களோடு நான் June 2026

Leave a Reply

error: Content is protected !!