மாநாடு 26 December 2025
தஞ்சாவூர் மாவட்டத்தில்
மோசமான நிலையில் கிராம நிர்வாக அலுவலகம் அச்சத்தில் மக்கள்..!

பேராவூரணி சட்டமன்றத் தொகுதி சேதுபாவசத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊமத்தநாடு கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் அபாய நிலையில் உள்ளது, இங்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் பணியாற்றி வருகின்றனர், பல்வேறு சான்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளுக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்த அலுவலகத்தின் முன்புறமுள்ள சிலாப்பில் கான்கிரீட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. கட்டிடத்தின் உட்பகுதியிலும் விரிசல் உள்ளது. இதனால் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு வரும் மக்கள் அச்சத்துடனே வர வேண்டி நிலை உள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரும் வருவாய் துறையும் விரைவில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பராமரிப்பு பணி செய்ய வேண்டும், அல்லது புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்டிதர வேண்டும் என ஊமத்தநாடு கிராம பஞ்சாயத்து மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என்று பொறுத்திருந்து பார்ப்போம்..!
செய்தி – அருள்
