மாநாடு 14 January 2026
தஞ்சாவூர் மாநகராட்சியில் சமத்துவத்தை காட்டிச்சென்றுள்ளது மாடு,
உதவ ஆள் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் பணி ஓய்வு பெற 3 மாதமே உள்ள மாநகராட்சி தூய்மை பணியாளர் கமலா,
நம்மில் ஒருவர், நமக்காக உழைத்தவர் உதவ ஆளில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறாரே சென்று பார்ப்போம்,
ஆறுதலாக இருப்போம், அரவணைப்போம் என்கிற பொறுப்பு கொஞ்சமும் இல்லாமல் , சமத்துவத்தை நிலை நாட்டாமல், அப்படி என்றால் என்னவென்றே தெரியாமல்,
நடனம் ஆடி, ஓடி விளையாடி, வைஃப் ஏற்படுத்தி வைப்பது , குலவையிட்டு சுவைத்து வழித்து நக்கி தின்பது தான் பொங்கல் என்று நினைத்து கூடி இன்று கொண்டாடி வருகிறார்கள் தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகள்
என்கிற செய்தி மனசாட்சி உள்ள அத்தனை பேரையும் உலுக்கும். என்ன நடந்ததுள்ளதென்றால் ;
தஞ்சாவூர் மாநகராட்சியில் சர்வ சாதாரணமாக மாடுகள் சாலைகளில் சுற்றுவதை அனைவருமே காண முடியும், இதனால் வெளிவராத விபத்து செய்திகளும் பல நடந்தேறி தான் வருகிறது என்கிற போதிலும்
Sponsored Ad

மாநகராட்சி அலுவலர்கள் மக்களை காக்கும் மகத்தான பணியில் இருக்கிறோம் நாம் என்பதை உணர்ந்து அதனை கட்டுப்படுத்த நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பிறகும்
சட்டத்தைக் கொஞ்சமும் மதிக்காமல் மெத்தனமாக இருந்து வருவது பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தில் சென்று முடியும் என்று பலமுறை மாநாடு செய்தி குழுமம் செய்திகளின் வாயிலாக சுட்டிக் காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஆனாலும் எப்போதாவது மட்டும் படம் பிடிப்பதற்காக மாடுகளை பிடித்து வண்டியில் ஏற்றுவது போல் செய்திக்காக செய்கிறார்களே தவிர , செயலில் மக்களின் மீது உள்ள அக்கறையில் இவர்கள் செயல்படவில்லை என்பதை சாலையில் சுற்றி, அச்சுறுத்தும் மாடுகள் இவர்களின் பணி லட்சணத்தை காட்டுகிறது.

பெரும்பாலும் தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் போன்ற மக்களின் பணிக்காக வந்திருக்கும் மாநகராட்சி ஊழியர்கள் பலரும், பல பிரிவினரும் போன் செய்தால் கூட எடுத்து பேச மாட்டார்கள் என்பது நாம் மட்டும் சொல்லும் சொல் அல்ல , மக்களின் சொல்லும் அதுவே , எப்போதாவது கேட்டால் நேரில் … மீட்டிங்கில் இருந்தோம் சார் என்பார்கள்.
அப்படி மீட்டிங் போட்டு என்ன தான் செய்தார்களோ? சொறி நாய்கள் சுற்றி வருகிறது, மாடுகள் சுற்றித் திரிகிறது,
சாலைகளை அடைத்து கொண்டு ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிக்கிறது, சாக்கடைகள் பல ஆண்டுகளாக சீர் செய்யாமல் வழிந்து ஓடுகிறது,
பல பகுதிகளில் குடிதண்ணீர் கூட பல ஆண்டுகளாக கிடைக்காமல் கட்சியின் மானம் காற்றில் போகக்கூடாது என்பதால் கட்சிக்காரர்களும் , சில வழிகளிலாவது கமிஷன்கள் கிடைக்கிறதே என்று சில கவுன்சிலர்களும் , கனத்த இதயத்தோடு பொதுமக்களும் காத்திருக்கிறார்கள் வரும் தேர்தலை எதிர்பார்த்து.
இப்படி பல அவலங்கள் இருந்தாலும் தஞ்சாவூர் மாநகராட்சியில் நடைபெறும் பணிகளை பற்றி பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தும் விதத்தில் அதிகாரிகளை பார்த்து , பல ஊர்களில் இதே தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பி மக்களுக்காக பணியாற்றும் பல செய்திகளை நாம் பார்த்து வருகிறோம் அல்லவா .. சமீபத்தில் கூட திருப்பூரில் எம்எல்ஏ நாற்காலியை போட்டு அமர்ந்து கொண்டு அங்கிருக்கும் குப்பையை அள்ளி அகற்றும் வரை நான் நகர மாட்டேன் என்று அமர்ந்து செயல்படுத்தி காட்டியது சிறப்பாக இருந்தது தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது என்ற போதிலும்,

ஏனோ தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் கூட அக்கறையோடு அப்படி கேட்டதாக தெரியவில்லை, அதனால் தானோ என்னவோ இங்கு எல்லாமே இருக்கு .. ஆனா இல்லை என்பது போல இருக்கிறது.
இந்நிலையில் இன்று காலை தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் ஆர்.ஆர்.நகர் பெட்ரோல் பங்க் அருகில் மாநகராட்சி கோட்டம் 13ல் தூய்மை பணியை மேற்கொண்ட தூய்மை பணியாளர் கமலாவை

அங்கு சுற்றி திரிந்த மாடு முட்டியதில் படுகாயம் அடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்

ரவிக்குமார் 13வது கோட்ட மேஸ்திரி
இதுவரை தூய்மை பணியாளர் கமலாவை நேரில் சென்று பார்த்து உதவாமல் சமத்துவ பொங்கல் கொண்டாடி வருகிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.
இத்துறையின் அதிகாரியாக இருக்கின்ற மாநகர் நல அலுவலர் மருத்துவர் நமச்சிவாயம், அப்பகுதியின் சூப்பர்வைசர் ரவிக்குமார் உள்ளிட்ட எந்த மேலதிகாரியும் நேரில் மருத்துவமனைக்கு வரவில்லை என்கிறார்கள்.
இது எது மாதிரியான மனநிலை? இதை தான், இப்படி தான் பொங்கல் வைத்து கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நீங்கள் இன்று வைப்பது மகிழ்ச்சியான பொங்கலா ? திமுக ஆளும் கட்சிக்கு வைக்கும் பொங்கலா ?

அவ்வப்போது படம் போட்டு அனைத்தையும் மறைத்து விடலாம் என்று நினைத்தால்… மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்து விடுகிறீர்கள் என்று பொருள்.
அக்கறையில்லாமல் இக்காரியங்களை செய்து வரும் அலுவலர்கள் மீது எக்குறையும் இல்லாதது போல விட்டுவிடாமல் ,

விடாப்பிடியாக பிடித்து கடுமையான நடவடிக்கை எடுப்பததன் மூலமே இனி இது போல நடக்காமல் தடுக்க முடியும் செய்வாரா ? செய்ய உத்தரவிடுவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின் ? பொறுத்திருந்து பார்ப்போம்…
