Spread the love

மாநாடு 22 April 2026

நாளை 23ந்தேதி நடைபெற இருக்கிற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்தும் ஏதோ ஒரு காரணத்தால் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்காமல் இருக்கக்கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் கீழ்க்கண்ட 13 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என்று கூறியுள்ளது அதன் விவரம் வருமாறு :

13 விதமான ஆவணங்களை பயன்படுத்தி ஓட்டுப் போடலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அந்த ஆவணங்கள்: 1. பாஸ்போர்ட். 2. ஓட்டுனர் உரிமம். 3. வருமானவரி ‘பான்’ கார்டு. 4. மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சிகள் வழங்கிய புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை. 5. தபால் அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள், கிசான் பாஸ்புக். 6. புகைப்படம் ஒட்டிய பென்ஷன் ஆவணம். 7. சுதந்திர போராட்ட வீரருக்கானபுகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை. 8. நிலப்பட்டா, பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தம் உள்ளிட்ட சொத்து ஆவணம். 9. எஸ்.சி.,எஸ்.டி., மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான புகைப்படம் ஒட்டிய சான்றிதழ். 10. ஆயுதம் வைத்திருப்பதற்கான உரிமம். 11. உரிய துறை வழங்கிய மாற்றுத் திறனாளி சான்றிதழ். 12. தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கான அடையாள அட்டை. 13. தொழிலாளர் துறை வழங்கிய மருத்துவக் காப்பீடு ‘ஸ்மார்ட் கார்டு இந்த ஆவணங்கள் அனைத்திலும் வாக்காளரின் புகைப்படம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த ஆவணங்கள் எதுவாக இருந்தாலும் கடந்த பிப்., 28க்கு முன் வழங்கப்பட்டதாக இருக்க வேண்டும். இந்த 13 ஆவணங்களை பயன்படுத்தி ஓட்டுப் போட முடியும். வாக்களிக்க வேண்டியது தவிர்க்க கூடாத ஜனநாயக கடமை அது நமது உரிமை என்பதை உணர்ந்து அனைவரும் நாளை நடைபெற இருக்கிற தேர்தலில் வாக்களிப்போம்.

90750cookie-checkதேர்தலில் நீங்க ஓட்டு போடலாம். இந்த 13 ஆவணங்களில் ஒன்று இருந்தாலே போதும்.. அனைவரும் வாக்களிப்போம்.

Leave a Reply

error: Content is protected !!