Spread the love

மாநாடு July 2026

ஊழலை ஒழிக்க வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே ஊழலை மறைக்கும் கேடயமாக நகராட்சி நிர்வாக இயக்குநரகம் பயன்படுத்துகிறதா என்ற கேள்வி தஞ்சையில் புயலைக் கிளப்பியுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சியில் செகண்ட் கிரேட் பணியாளராக இருந்த T. கார்த்திகேயன், பணி அனுபவம், துறை தேர்வு, பொறியியல் பட்டம் என எந்த விதிமுறையும் இன்றி அவசர கதியில் உதவி பொறியாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் சமர்ப்பித்த கல்விச் சான்றிதழே போலி என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.

இந்நிலையில், பாலங்கள், கட்டடங்கள், குடிநீர் திட்டம் போன்ற மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட பணிகளை மேற்பார்வையிடும் பொறுப்பில் தகுதியற்ற ஒருவர் அமர்வது மக்களின் பாதுகாப்புக்கே விடப்பட்ட சவாலாக மாறியுள்ளது. இதன் உண்மையை அறிய ‘அரசியல் மாநாடு’ இதழ் RTI மூலம் அவரது சான்றிதழ் நகலைக் கோரியபோது, நகராட்சி நிர்வாக இயக்குநரகம் “பிரிவு 8(1)(j) படி தனிநபர் தகவல் தர இயலாது” என மறுத்துள்ளது. ஆனால் இது சட்டப்படி முற்றிலும் தவறு, ஏனெனில் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியரின் பதவி உயர்வுக்கான சான்றிதழ் 100% பொது ஆவணம்; பிரிவு 8(1)(j) என்பது பொது நலனுக்கு தொடர்பில்லாத தனிநபர் தகவலுக்கு மட்டுமே பொருந்தும் என உச்சநீதிமன்றம் Girish Ramchandra Deshpande வழக்கிலும், மத்திய தகவல் ஆணையம் 2014-ல் “கல்விச் சான்றிதழை கட்டாயம் தர வேண்டும்” என்றும் தெளிவாக தீர்ப்பளித்துள்ளன. போலி ஆவணம் IPC 420, 468, 471 படியும், தகுதியில்லாதவருக்கு பதவி உயர்வு ஊழல் தடுப்புச் சட்டம் 13(1)(d) படியும் குற்றம் எனும்போது, சான்றிதழ் உண்மையென்றால் காட்ட ஏன் தயக்கம்? தகவலை மறைப்பதே நிர்வாகமே முறைகேட்டுக்கு துணை போவதை உறுதி செய்கிறது. இது RTI பிரிவு 4(1)(b) இன் படி ஊழியர்களின் தகுதியை தானாக வெளியிடும் விதியையும் மீறுகிறது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், துறை அமைச்சர் நேரடியாக தலையிட்டு T.கார்த்திகேயனின் சான்றிதழை ஆய்வு செய்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும், இல்லையேல் இது பெரிய ஊழல் வலையமைப்பின் வெளிப்பாடாகவே கருதப்படும். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குபவரின் தகுதியை கேட்பது குற்றமல்ல, அது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயகக் கடமை.

93130cookie-checkபோலிச் சான்றிதழா ..? மறைக்க காரணம்..

Leave a Reply

error: Content is protected !!