மாநாடு 30 May 2026

மாநாடு செய்தி எதிரொலி
மக்கள் சேவைக்காக அரசால் அமைக்கப்பட்ட ஏ.ஒய்.ஏ நாடார் நகர்ப்புற அரசு நலவாழ்வு மையம், 6 நாட்களாக மின்சாரமின்றி இருளில் மூழ்கி கிடந்தது மிகப்பெரிய அவலம்.

பொது சுகாதார சட்டம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டப்படி, உயிர் காக்கும் அரசு மருத்துவமனையை மின்சாரமின்றி வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம்.
‘மாநாடு’ செய்தி வெளியிட்டவுடன் 24 மணி நேரத்தில் மின் இணைப்பு சீரமைக்கப்பட்டது. செய்தி வரும் வரை காத்திருந்தது ஏன்? மக்கள் உயிர் என்றால் அலட்சியமா? உடனடியாக தீர்வு கிடைத்ததற்கு சமூக ஆர்வலர்கள் ‘மாநாடு’ செய்தி குழுமத்திற்கு பாராட்டு தெரிவித்து, “மக்களுக்காக மாநாடு என்றும் பேசும்” என வாழ்த்தினர்.

917200cookie-checkமாநாடு செய்தி எதிரொலி
